யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியை பிறப்பிடமாகவும் வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற மருத்துவ மாதுவும் ருக்மணி என்று அன்பாக அழைக்கப்படும் சதிலீலாவதி 29.11.2020 அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற முன்னாள் காணி உத்தியோகத்தர் தணிகாசலத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் , சத்தியமூர்த்தி ,தயானந்தி (டென்மார்க்) ,கிருஷாந்தி (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும், வசந்தா (ஆசிரியை நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்) , கிருபாகரன் (டென்மார்க்) , வசீகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம் ,அன்னலெட்சுமி , சத்தியபாமா , மகேஸ்வரி , றங்கநாதன் மற்றும் இராசாத்தி , இராமநாதன் , சிறீரங்கநாதன் (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
Leave a Condolence