416 -566-0590
info@tiktamil.com
243 Cosgrove dr Oshawa Ontario Canada

திரு செல்லையா விஜயசந்திரன் October 24, 1938 - January 23, 2021

தொடர்புகளுக்கு

 அரவிந்தன் - மகன்
 சிவகரன் - மைத்துனர்
 செல்வகுமார் - பெறாமகன்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா விஜயசந்திரன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார் , காலஞ்சென்ற செல்லையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும் , காலஞ்சென்ற சுந்தரராசா , ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும் , சறோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும் , அரவிந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும் , சாமினி அவர்களின் அன்பு மாமனாரும் , அஷ்வின் , சச்சின் , கோவிந் ஆகியோரின் பாசமிகு பேரனும் , காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் , திலகவதி மற்றும் யோகவதி , சோமவதி , யோகேஸ்வரன் , விமலேஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதரரும் , சோதிப்பிள்ளை பாலச்சந்திரன் , காலஞ்சென்றவர்களான ராஜதுரை , கணேசரட்ணம் , பாலசுப்பிரமணியம் மற்றும் கெளரீஸ்வரி விமலேஸ்வரன் , வசுந்தரா பேர்ன்ஸ் , காலஞ்சென்ற விஜயகுமார் , விமலாதேவி சிவலோகநாதன் , சிவகுமார் , பூமகள் சிவகரன் , அஜித்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ,சண்முகராஜா யோகேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார். இவர்களுடன் நண்பர்கள் , பெறாமகன்மகள் , பெறாமக்கள் , பேரன்மார் , பேத்திமார் மற்றும் எல்லா குடும்பங்களும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளார்கள்.

 இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு:- பொது சுகாதாரம் ஒன்டாரியோ நிறுவனத்தின் உத்தரவின் பேரில் 20 உற்றார், உறவினர்களே ஒரு மணித்தியாலத்தில் அனுமதிக்கப்படுவர். அதன் பேரில் நாங்கள் அவர்களிடம் இறுதி அஞ்சலி செலுத்த விரும்பும் உங்களின் பெயர் , தொலைபேசி இலக்கம் பதிவு செய்ய வேண்டியுள்ளது தயவு செய்து கீழ்கண்ட கைபேசி எண்ணுக்கு உங்கள் விபரங்களை அனுப்பவும்.
அரவிந்தன்: +19493003936

அன்னாரின் வேண்டுகோளுக்கு இணங்கி மலர்கள் , மலர் வளையங்களுக்குப் பதிலாக அவர் இருந்தகாலம் வரையில் , தன்னால் இயன்ற நன்கொடை செய்து வந்துள்ளார். சிறுவர் மற்றும் பார்வையற்ற காது கேளாத சிறுவர் காப்பகங்களுக்கு நன்கொடை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

காசோலை மூலமாக Foundation for Hope என்னும் நிறுவனத்திற்கு எழுதி அனுப்பவும்.
Foundation for Hope, C/O S.Wijayachandran
228 Galloway Rd, #504,
Toronto, ONT MIE 5G6, Canada.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 31st Jan 2021 12:30 PM
பார்வைக்கு
கிரியை

உலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்
உறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்

பூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக
அனுப்பிவைக்கலாம்

Leave a Condolence